வெள்ளை படுதல் நிற்க - vellai paduthal kunamaga

Owshadham - ஒளசதம்

வெள்ளைப் படுதல் குணமாக - vellai paduthal kunamaga

மருத்துவக் குணங்கள் இத்தாவரம் வயல் வரப்புகளிலும், காடுகளிலும் தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும். நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண் அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும். பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும். பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல், வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும். இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத் துவையல் செய்து உண்டுவந்தால் உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி, கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.    ஆங்கிலப் பெயர் Phyla nodiflora Greene. Rich and Verbena nodiflora L.
பொடுதலை

வெள்ளைபடுதல் குணமாக

பொடுதலை இலையுடன் சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிர் அல்லது வெண்ணெயில் கலந்து குடிக்க வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வர வெள்ளைபடுதல் குணமாகும்.

வெள்ளை படுதல் என்றால் என்ன, காரணங்கள், அறிகுறிகள்

  1. பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்.
  2. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் சுரத்தல்.
  3. முட்டை வெள்ளைக்கரு போலவோ, மோர் அல்லது தயிர் போன்று கட்டி கட்டியாக கூட படலாம்.
  4. சிலருக்கு தண்ணீர் போன்றோ, பால் போலவோ கூட இருக்கும்.
  5. வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல்.
  6. மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்
  7. வெள்ளைப் படுவதால் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாதல்.
  8. இடுப்பு வலி, முதுகு வலி.
  9. உடல் மெலிந்து போதல். இளைத்தல்.
  10. இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.
  11. உடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.
  12. உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.
  13. பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.
  14. மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.
  15. இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.
  16. பொதுவாக ஒரு சில பெண்களுக்கு வயதிற்க்கு வந்த நாள் முதலே வெள்ளைப் படுதல் இருக்கும்.

வெள்ளைப் படுதல் வருவதற்கான காரணங்கள்.

  1. தவறான உணவுப் பழக்கங்கள்.
  2. கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.
  3. சுகாதாரமற்ற உள்ளாடைகள்.
  4. சுய இன்பம் காணுதல்.
  5. மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.
  6. ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.
  7. உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
  8. கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.
  9. சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.
  10. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
  11. தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
  12. சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
  13. அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
  14. மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.
  15. எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளைப் படுதல் நிற்க்க.

  1. பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.
  2. இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .
  3. திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.
  4. ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.
  5. பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.
  6. சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
  7. கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.
  8. வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
  9. அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
  10. வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.
  11. தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  12. அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.
  13. பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
  14. கைப்பிடி அளவு வெள்ளறுகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.
  15. இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.
  16. ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

வெள்ளைப் படுதல் நோயைத் தவிர்க்க

  1. உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  3. உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
  4. சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.உணவு முறைகள்:
  5. உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  6. சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
  7. எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.
  8. மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.
  9. இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.
  10. இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
  11. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
  12. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.
  13. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.
  14. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.
  15. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!
  16. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.
  17. கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.
  18. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.
  19. வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!
  20. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!
உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.

ஔசதம்
Owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.