பெண்கள் பிறந்த கிழமை ஜாதக பலன் - pengal pirantha kizhamai jathaga palan

Owshadham - ஒளசதம்
பெண்கள் பிறந்த கிழமை ஜாதக பலன்
பெண்கள் பிறந்த கிழமை ஜாதக பலன்

1. ஞாயிற்று கிழமை பிறந்த பெண்களுக்கு

"அறுசுவை யறிந்தநல்லாள் அனல்கொண்ட தேகியாகும்
பெருமைசேர் கீர்த்திரூபம் பேசுவள் கடினவாக்கு
தருகுவள் பதிக்குயின்பம் தருமநன் னடக்கைபின்னால்
வருமென புத்திரலாபம் வழ்த்தினார் கதிர்வாரத்தே"

சூரிய வாரத்தில் உலகில் பிறந்த பெண்ணானவள் கடினமான சுபாவமும், சுகவாசியும், பிரகாசமான முக அமைப்பும் அருசுவை ருசியினை நன்கு அறிந்தவள், உஷ்ணமான தேகமும், கணவனுக்கு பிரியமானவள், தர்ம குணமும், நல்ல நடவடிக்கையும், முதிர்ந்த காலத்தில் புத்திர விருத்தியும் உடையவளாய் இருப்பாள்.

2. திங்கட்கிழமை பிறந்த பெண்களுக்கு

" திங்கட்போல் தேகிபாக்கியம் தினமுஞ்சந் தோஷபுத்தி
மங்கள குணங்கள்கற்பு மகவுபெண் போக முள்ளாள்
நங்கையா பாணம்வாசந் நளிலும் தவறாள்நித்தம்
கங்கையா டுவளேயென்று கணிதநூ லுரைத்தவாறே "

 சந்திரனுடைய நாளாகிய திங்கட்கிழமை பிறந்த பெண் சந்திரனைப் போல் குளிர்ந்த தேகம், பாக்கியம், உத்தமீ, மனசந்தோசம், ஆடை, ஆபரணங்களோடும் கூடி வாழ்பவள் மேலும் பல நற்குணங்களும் பெண் சந்ததியுடையவள்.

3. செவ்வாய் கிழமை பிறந்த பெண்களுக்கு

"பார்சுதன் நாளில்வந்தப் பாவைநான் வடிவுசாந்தம் 
நேர்சுகம் சனகரில்லம் நித்தமுங் குறைந்தசெல்வம்
பார்வையுங்  கடினவாக்குப் பகருவள் சினத்தாள் சற்று
சோர்வுள நெஞ்சம்செம்மை சுந்தரி யாடையாமே"

அங்காரகனுடைய நாளான செவ்வாய் கிழமையில் பிறந்த பெண்கள் நல்ல அழகுடையவர்கள், பிறர் சுகிக்கப்பாராள், பொறுமை, விரோத சுவாபம் உடையவரய், தான் பிறந்த இடத்தில் நாளுக்குநாள் குறைவான செல்வம், சிகப்பு ஆடை தரிப்பாள், என்றும் தன்னை இளமையாக எண்ணிக் கொள்பவளாய் இருப்பாள்/.
4. புதன் கிழமை பிறந்த பெண்களுக்கு

"சிந்தையுந் தருமவாக்குச் சீருள வித்தைநல்லாள்
புந்தியில் குரோதமின்றிப் புகலுவள் சத்தியமாக
நிந்தையில் சேராள்கற்பு நிலைத்திடுந் தேகியாவாள்
புந்திநா ளுதித்தமங்கைப் புண்ணிய தவத்தாளென்றார்" 


புதன் கிழமை ஜனனமான பெண்களுக்கு தரும புத்தி, சத்தியமான வாக்கு, வித்தை நற்குணம், எப்போதும் சந்தோசமான மனம், அன்பான வார்த்தைகள், சுக துக்கத்தை சமமாக எடுத்துக் கொள்ளும் மனோ பக்குவம், கெட்ட வழியில் செல்லாதவள், கற்பை நிலைகாக்கும் புண்ணியவதி ஆவாள்.

5. வியாழக்கிழமை பிறந்த பெண்களுக்கு

 "செய்யாள்துற் காரியன்கள் சேமமே நிலைக்குமில்லம்
உய்யவனோ டிணைபிரியா ளுத்தமியென் றுலகுமெய்க்க
பொய்மையு மில்லையென்றும் புகலுவாள் தருமநீதி 
மெய்மைநன் னடக்கையென்பார் மேதினி குருவாரத்தாள்"

குருவாரமென்னும் வியாழக்கிழமையில் ஜனனமான பெண்ணான நீங்கள் மனமரிந்தும் கூட பாவங்கள் செய்யமாட்டீர்கள். தன தான்ய செல்வங்கலள் பெற்றிருப்பீர்கள், கணவனை என்றும் பிரியா மனமுடையவர், உத்தம மான குணமுடையவள், பொய்சொல்லாள், தர்மநீதி வார்த்தை கூறுபவள்.
6.வெள்ளிக்கிழமை பிறந்த பெண்களுக்கு

 "சுக்கிர வாரந்தன்னில் சுந்தரி யுதயமானால் 
மிக்கவா பரணபிரீதி மேன்மையவா கனமுங்கற்பு
தக்கதோர் தனங்கள்செல்வம் தரணியில் நிலைக்குமென்றார்
முக்கியமுள்ளா ளெங்கும் முமலர் வாக்குநன்றாம்"
திருமகளுக்கு உகந்த சுக்கிர வாரத்தில் (வெள்ளிகிழமை) பிறந்த பெண்களுக்கு ஆடை ஆபர்ணங்களில் அதிக ஆர்வமும், வாகன ஆசையும் பெற்றிருப்பார்கள், பதிவிரதை, உத்தமியாகவும், தனம், தான்யம், செல்வம் நிறைந்து இருப்பார்கள், பிரியமான முகமுடையவள், அன்பான செல்லுடையவளாகவும், அனைவரையும் எளிதில் நம்பும் சுபாவம் உடையவள்.
 
வெள்ளி கிழமை பெண்குழந்தை பிறப்பது மிகவும் சிறப்பானது.

 7. சனிக்கிழமை பிறந்த பெண்களுக்கு

"மந்தனில் லழுக்குவாடை மனமதில் பயமுமில்லாள்
நிந்தையும் பிறர்விரோதம் நிச்சய மில்லாநெஞ்சம்
அந்தமும் தயையுமீனம் அல்பபுத் திரராமென்றார்
வந்ததே யிருக்கும்வியாதி வையகந் தன்னிற்றானே" 

சனிக்கிழமை பிறந்த பெண்மணியானவள் அழுக்குத் துணிகளையணிதல், பயமில்லாமல் சஞ்சரித்தல், பிறரைத் தூஷிதல், ஜனவிரோதம் சபல சித்தம் அழகில்லாள் அற்ப புத்திரர் விசுவாச மில்லாள், வியாதியுள்ள சரீரமுடையவளாம்.

இத்தகவல் கொலும்பு ஜாதக புத்தகத்தில் இருந்து சேகரிக்கப் பட்ட ஓர் பொது பலன்கள் மட்டுமே, அவரவர் பிறந்த கிழமை, நேரம் மற்றும் நட்சத்திரங்களை பொருத்தே சரியான பலன் தெரிந்து கொள்ள முடியும் என்பதை மனதில் நினைவு கொள்க.

pengal jathagam, pengal jadhagam, pengal jothidam, pengal jodhidam, pirantha kizhamai palan, kama pengal jadhagam, kama pengalin jadhagam, kama pengalin jothidam, pirantha naal palangal, nalla pengal jathagam kantariya, pen kuzhanthai pirakka vendiya natkal, penkuzhanthai, kudumpa pengal jathagam, athirsta pengal jathagam, ketta pengal jathagam, kama unar vulla pengal jathagam. lucky pengal jathagam, lucky girls jothidam.

பெண்கள் ஜாதகம், பெண்கள் ஜோதிடம், பிறந்த கிழமை பலன்கள், காம பெண்கள் ஜாதகம், காம பெண்கள் ஜோதிடம், பிறந்த நாள் பலன்கள், பெண்குழந்தை பிறக்க வேண்டிய நாள். நல்ல பெண்களின் ஜாதகம், குடும்ப பெண்களின் ஜாதகம், அதிர்ட பெண்களின் ஜாதகம், லக்கி பெண்கள் ஜாதகம், கெட்ட பெண்களின் ஜாதகம், காம உணர்வுள்ள பெண் ஜாதகம்.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.