சித்த மருத்துவம் - மூலிகை மருத்துவம் - Tamil siddha maruthuvam - Tamil mooligai maruthuvam

Owshadham - ஒளசதம்

சித்த மருத்துவம் - மூலிகை மருத்துவம் - Tmail siddha maruthuvam - Tamil mooligai maruthuvam

 
சித்த மருத்துவம் - மூலிகை மருத்துவம் - tamil maruthuvam  tamil mooligai maruthuvam siddha medicine in tamil
சித்த மருத்துவம்
                மனிதன்தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமானோர் பலியாயினர். இப்படியான நோய்களை என்னவென்று அறியாது பேய், பிசாசு, தெய்வக்குற்றம் என இவர்களே அதற்கு ஒரு பெயரிட்டுக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு கொண்ட மக்கள் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள் போன்றவர்களை நாடிச் சென்றனர்.

இவர்களின் அறியாமையையும், நோயின் தாக்கத்தால் அவர்கள் படும் வேதனைகளையும் கண்ட சித்தர்கள் தங்களின் தவப் பயனால் மனித உடல்கூறுகளை கண்டறிந்தனர். இவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக கணித்தனர். பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்புகளைக் கண்டு கோள்களின் ஆதிக்கம் மிகும்போது மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டனர். இதனால் புரியாத நோய்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர். மனித உடம்பினுள் உள்ள எலும்பு, தசை, நரம்பு இரத்த நாளங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதனால் நாடியைப் பிடித்துப் பார்த்தவுடன் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சித்தர்கள் கண்டறிந்தனர். நோய்க்கு மருத்துவம் செய்வதை விட அந்த நோய் உருவாக காரணம் என்ன என்பதை அறிந்து அதனை வேரோடு அகற்ற மருத்துவம் செய்தனர். இதற்கு மூலிகைகளைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு ஆதி காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்த மருத்துவம்தான் இந்திய மருத்துவ முறையான சித்தா, ஆயுர்வேதா, வர்மா, யுனானி, இயற்கை மற்றும் யோகா மருத்துவம்.

இந்திய மருத்துவமும், ஜெர்மானிய மருத்துவமான ஹோமியோபதி மருத்துவமும் ஆங்கில மருத்துவமான அல்லோபதி மருத்துவத்திற்கு இணையாகவே போற்றப்படுகிறது.

நாட்டை ஆளும் மன்னர்களுக்கு என தனியாக ராஜ வைத்தியர்கள் நியமிக்கப் பட்டனர். சாதாரண மக்களுக்காக பல வைத்திய சாலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு மருத்துவம் செய்யப்பட்டு வந்தது.

பின்னாளில் நம் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்ததால் அவர்கள் அல்லோபதி மருத்துவத்தை நம்நாட்டில் புகுத்தினர். அதோடு எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தும் சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறைகளில் சிலவற்றை களவாடி ஆங்கில மருத்துவத்தில் இணைத்துக்கொண்டனர். இதனால் ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் பாரம்பரிய மருத்துவக் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகியது. மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.


குறிப்பாக கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் இன்றும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் ஆங்காங்கே சித்த மருத்துவம் செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் ஆங்கில மருத்துவத்தின் தாக்கத்தால் இந்திய மருத்துவ முறையின் சிறப்புகள் எல்லா மக்களையும் சென்றடையவில்லை. மேலும் பல மருத்துவச் சுவடிகள் சுயநலவாதிகள் சிலரிடம் சிக்கி வெளியேறாமல் அழிந்து வருகிறது.

மேலும் இந்திய மருத்துவத்திற்கென சரியான பாடசாலைகள், கல்லூரிகள் இல்லாமல் குருகுலக் கல்வியாக மட்டுமே இருந்து வந்தது. இதனால் இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவத்தின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வில்லை. இந்திய மருத்துவம் கற்றவர்களும் சுயநலவாதிகளாக செயல்பட்டதும் இந்திய மருத்துவம் வளராததற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக இந்திய மருத்துவம் மிகவும் நுட்பமான மருத்துவ முறையாகும். நோயின்றி வாழ, வருமுன் காக்க, வந்தபின் சிகிச்சை அளிக்க என வகைப்படுத்தி மருத்துவமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதை முறையாகக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் இன்று 30 வயது இளைஞன் கூட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகளால் தாக்கப்பட்டு அவதிப்படுகிறான். இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் அந்நியநாட்டின் மீதுள்ள மோகமே எனத் தோன்றுகிறது.

இயற்கைக்கு மாறுபட்ட உணவுகள் உதாரணமாக ரசாயனம் கலந்த குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் என வகைவகையாக உண்டு, உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் வேலை செய்து, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது இதற்கு முதற் காரணம்.

இயற்கையை மறந்துபோன மனிதன் இயற்கை மருந்துகளையும் மறந்து நாகரீக முன்னேற்றத்திற்கு ஆட்பட்டு சுகாதாரமற்ற வேகமான வளர்ச்சி யடைந்ததால் நவீன அதிவேக சிகிச்சைகள் தேவைப்பட்டன. இந்த சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் எளிமையாக நடைபெறுவதால் இந்திய மருத்துவத்தை மக்கள் நாடாமல் ஆங்கில மருத்துவத்தையே நாடினர்.

ஆனால் அவர்களால் முழுமையாக குணமடைய முடியாமல் உடல் ரீதியாக பக்க விளைவுகளுக்கு ஆளாயினர்.

உதாரணமாக அண்மையில் சிக்குன் குனியா என்ற நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து கிடைக்கவில்லை. ஆனால் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் இருந்தன. சித்த மருத்துவத்தில் இதனை மொழி முறிச்சான் காய்ச்சல் என அழைக்கின்றனர். சித்த மருத்துவத்தின் மூலமே இந்த நோயைத் தீர்க்கும் சரியான மருந்து கண்டுபிடித்தனர். இந்த மருந்துதான் நோயை முழுமையாக அழித்தது.

இதுபோல் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்திய மருத்துவத்திற்கு உண்டு.

தற்போது ஆயுர்வேத கல்லூரிகளும், சித்த மருத்துவக் கல்லூரிகளும் மத்திய அரசின் அனுமதியுடன் மருத்துவப் பல்கலைக் கழக பாடத்திட்டத்தின் படி சிறப்பாக ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது.

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்களை மேலை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு இங்கு வந்து சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து செல்கின்றனர். மேலும் யோகா, பட்டயப் படிப்பை சில கல்லூரிகள் நடத்துகின்றன.

எதிர்வரும் காலங்களில் பக்க விளைவுகள் இல்லாமல் நோயின் மூலத்தை அறிந்து அதை அழிக்கும் திறன் கொண்ட இந்த மருத்துவ முறைகள் முன்னோடியாக இருக்கப்போவது நிச்சயம்.

தற்போது பள்ளி இறுதி தேர்வு முடித்து மருத்துவராக வர எண்ணுபவர்கள் அல்லோபதியைப் பற்றி எண்ணாமல் எதிர்காலத்தை வளங்கொழிக்க வைக்கும் இந்திய மருத்துவத்தைப் படியுங்கள். அரசுப் பணிகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நோயில்லா சமூகத்தை உருவாக்கவும் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றவும் இந்திய மருத்துவப் படிப்பு நிச்சயம் உதவும்.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.