ஆலமரம் - Aalamaram

Owshadham - ஒளசதம்



தமிழ் பெயர் : ஆலமரம்
ஆங்கில பெயர் : Banyan tree

அமைப்பு

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது.

மருத்துவப் பயனுடைய பகுதிகள்

நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

உடல் பலம், வெப்பு

விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

மேக நோய்கள்

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு (white discharge) தீரும்.

கொறுக்கு

ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.

வெடிப்பு

ஆலம் பாலை காலை, மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால், வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.

பாதரசபாசாணங்களின் வேகம் குறைய

ஆலம் பட்டை, அத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40கிராம், 10கிராம், மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் நாள்தோறும் 3 வேளை குடித்து வர பாதரச பாசாணங்களின் வேகம் குறையும்.

 மதுமேகம் (Diabetes)

ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் (Diabetes) தீரும்.

 விந்து அணுக்கள்

ஆலம்பழம், விழுது, கொழுந்து சமஅளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்

 தாய்ப்பால் பெருக

விழுதுத் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

 இரத்தபேதி

துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்கு தயிரில் கலந்து கொடுத்து வர இரத்தபேதி நிற்கும்.

பற்கள் உறுதிப்பட

விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

aalamaram aalam palam aalamara viluthu aalam poo aalam paal aalamara maruthuva payan pal kutchi iyarkai mooligai press kaama perukki magaa sakthi mooligai. moolikai. thaaipaal peruga, thaipal peruga, Aanmai peruga, vinthu peruga, aanmai palam pera. 

ஆலம் பலம், ஆல மரம், ஆலம் விழுது, ஆலம் பூ, ஆலம் பழம், ஆலம் பால், ஆலமரம் மருத்துவ பயன்கள், பல் குச்சி, இயற்கையான பல் விலக்கும் பிரஸ். காம பெருக்கி. மகா சக்தி மூலிகை.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.