ஆனை நெருஞ்சில்

Owshadham - ஒளசதம்
ஆனை நெருஞ்சில் பயன்படும் பாகங்கள் மலட்டுத்தன்மை வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி விந்தணுக்கள் பெருக சிறுநீர் பெருக்கும் மூலிகை வலிகளுக்கு நெருஞ்சில் விதை மூலிகை சேர்த்த நெய் நீரிழிவு ஆண்மை குறை தீர மாதவிடாய் குழந்தை வரம் தரும் நெருஞ்சி  பாலியல் பிரச்சனைகள் பூப்படையாத பெண்கள்  பூப்படைய  கருப்பை கோளாறுகள் வெட்டை நோய் வீரிய விருத்தி ஆண்மை அதிகரிக்க  கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் பிரச்னை சிறுநீரில் ரத்தம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கல் அடைப்பு கண்ணில் நீர் வடிதல் மஞ்சள் காமாலை மாதவிடாய்  இரத்தப்போக்கு
 ஆனை நெருஞ்சில்

பொதுவான குணங்கள்:


சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் 'டானிக்', குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும்.
நெருஞ்சில் மருத்துவ குணம்


பெயர்கள்

தாவரவியல் பெயர் : Tribulus Terrestris
குடும்பம் : Zygophyllaceae
இதர பெயர்கள் : சமஸ்கிருதம் - கோக்சுரா
இந்தி: கோக்ரூ / காக்ரூ, ஆங்கிலம் - Caltrops
தமிழில் இதர பெயர்கள்: திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சி புதும், காமரசி


பயன்படும் பாகங்கள்

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப்பயனுடையவை. சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.


மலட்டுத்தன்மை

 ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனைச் சிறிது சர்க்கரைச் சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.

வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி

10 கிராம் இலைப் பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.


சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு

50 கிராம் இலையை மென்மையாய் அரைத்துத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.


விந்தணுக்கள் பெருக

20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மாலையாகச் சாப்பிட்டு வர நீர்ச்சுருக்கு தீரும். விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.


சிறுநீர் பெருக்கும் மூலிகை

இதன் முக்கிய பயன் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக சொல்லுகிறார்.

ஆனை நெருஞ்சில் பயன்படும் பாகங்கள் மலட்டுத்தன்மை வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி விந்தணுக்கள் பெருக சிறுநீர் பெருக்கும் மூலிகை வலிகளுக்கு நெருஞ்சில் விதை மூலிகை சேர்த்த நெய் நீரிழிவு ஆண்மை குறை தீர மாதவிடாய் குழந்தை வரம் தரும் நெருஞ்சி  பாலியல் பிரச்சனைகள் பூப்படையாத பெண்கள்  பூப்படைய  கருப்பை கோளாறுகள் வெட்டை நோய் வீரிய விருத்தி ஆண்மை அதிகரிக்க  கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் பிரச்னை சிறுநீரில் ரத்தம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கல் அடைப்பு கண்ணில் நீர் வடிதல் மஞ்சள் காமாலை மாதவிடாய்  இரத்தப்போக்கு
நெருஞ்சில் விதை

வலிகளுக்கு

சிறுநீரக பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சில் கஷாயம் நல்லது.


 நெருஞ்சில் விதை

பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலுக்கு, தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும்.


மூலிகை சேர்த்த நெய்

சிறுநீரக கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அநூரியா (Anuria) எனும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்ந்த கோக்சூராதி க்ருதம் (மூலிகை சேர்த்த நெய்) நல்ல மருந்து.


நீரிழிவு 

நெருஞ்சில் நீரிழிவு நோயை எதிர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தில் ஒன்று.

 ஆண்மை குறை தீர

ஜனன உறுப்புக்களின் செயல்பாட்டை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் பாலியல் உணர்வை தூண்டுகிறது. சதவாரி, அஸ்வகந்தா, இவற்றுடன் சேர்ந்து, பெண்களின் கர்பப்பை (Uterus) பாதிப்புகளுக்கு மருந்தாகும். ஆண்களின் ஆண்மையை பெருக்குகிறது. ஆண்மை குறை தீர, நெருஞ்சிலை தேனுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் நோய்களான கொனோரியா (Gonorrhoea) போன்றவற்றுக்கும் நெருஞ்சில் அருமருந்து. ஆண் ஹார்மோனான Testosterone உற்பத்திக்கு காரணமான Luteinizing hormone களை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் இளமையாக இருக்க உதவுகிறது. 30 நாட்கள் நெருஞ்சிலை உட்கொண்டு வர, ஆண்மலட்டுத்தன்மை நீங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



மாதவிடாய் 

10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
கருப்பு எள் மற்றும் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.

 

குழந்தை வரம் தரும் நெருஞ்சி

சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


 பாலியல் பிரச்சனைகள்

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. இதன் மருத்துவகுணம் பண்டைய கிரேக்க நாடுகளிலும், சீனா, வியட்டநாம், போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.


பூப்படையாத பெண்கள்  பூப்படைய

பெண்களுக்கு நிவாரணம் நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர்.


 கருப்பை கோளாறுகள்

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.


வெட்டை நோய்

நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.


வீரிய விருத்தி

ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.


 கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் பிரச்னை

கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.


சிறுநீரில் ரத்தம்

சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.


சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள்

சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.


 கல் அடைப்பு

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.


 கண்ணில் நீர் வடிதல்

கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.


 மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலைக்கு நிவாரணம் நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும். இதனை அரைத்துச் சாறு பிழிந்து குடித்தால் சிறுநீருடன் இரத்தம் கசிவது நிற்கும். விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.


மாதவிடாய்  இரத்தப்போக்கு


10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.



யானை நெருஞ்சில் ஆணை நெருஞ்சில்  யாணை நெருஞ்சில் மருத்துவ பயங்கள்,  ஆனை நெருஞ்சில் முள்  ஆனை நெருஞ்சில் சாபிடும் முறை Tribulus Terrestris in tamil, mooligai peyarkal in tamil mooligai edukum murai. maathavidaai manjal kaamalai kal adaippu siru neer sampantha noikal vireeya viruthi karupai kolaru karppa pai kolaru poopadaiyatha pengal, vayathukku varatha pengal, vayathukku vantha pengal kulanthai pera mooligai, kulanthai varam tharum mooligai. nerunchil mull neunjil mul nerunchil mooligai maladu malattu thanmai neenga. karu uruvaga.

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.