மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020

Owshadham - ஒளசதம்

மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள்


வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின் அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.


எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும் விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் நிதானமும், நடு நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.


12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலிட்டு ஸ்தானமும் கூட, உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள் ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம் அமையும். குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.


எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில் தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும்.

எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.



வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள் வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள் உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.

உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள் வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி அவைகள் நல்லவிதமாக வந்து சேரும்.


சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம் வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது நிரந்தர பழக்க வழக்கங்களை மேற் கொள்ளக் கூடாது. முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம் அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுதல் வேண்டும்.


12  ராசிகளுக்கான சனி பெயர்ச்சியின் விரிவான பலன்கள் 


சனி பெயர்ச்சியில் நற்பலன் கிடைக்க செய்ய வேண்டியவை 

[மேலும் படிக்க...]

keywrods:sani peyarchi 2017, sani peyarchi 2017 to 2020 in tamil language, sani peyarchi 2017 to 2020 tamil, sani peyarchi 2017 in tamil,sani peyarchi 2017 to 2020 predictions in tamil, sani peyarchi 2017 date, saturn transit 2017-2020, sani peyarchi 2017 to 2020 for makara rasi, sani peyarchi 2017 to 2019,sani peyarchi palangal 2017 to 2020 in tamil language, 2017 sani peyarchi, mithuna rasi sani peyarchi pothu palan 2017. maharam, mgaram sani peyarchi palankal 2017, மகர ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 to 2020, மகர ராசி சனிப்பெயர்ச்சி, 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள், 2017 முதல் 2020 வரை  சனிப்பெயர்ச்சி பலன்கள், மகர ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள். சனி பெயர்ச்சி பலன்கள் மகரம், 12 ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்கள் விரிவாக.  சனி ஆதிக்கம், சனி பகவான் ஆதிக்க வேகம் குறைய. சனி பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி 2017 அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது சனிப்பெயர்ச்சி 2017 2020 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2016 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020, சனி பெயர்ச்சி 2017 to 2020 சனி பெயர்ச்சி எப்போது

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.