மிக்கி பேசின் ஸ்ரீசக்கரம் - Mickey basin sri chakra in tamil

Owshadham - ஒளசதம்

அமெரிக்காவின் மிக்கி பேசின் பாலைவனத்தில் காண்பப்டும் ஸ்ரீசக்கரம். ஸ்ரீசக்கர மந்திர பயன் மற்றும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசக்கரம் படங்கள், ஸ்ரீசக்கரம் பூஜை, ஒளசதம். mickey basin sri chakra, mickey basin sri yantra, mickey basin oregon sri yantra, america sri chakram, sri chakra puja, sri chakra oregon, sri chakram in usa, sri chakra yantra, how to draw a sri chakra, sri chakra buy online, sri chakra in usa, sri chakra in tamil, sri chakra inn chennai. sri chakram payankal, kidaikkum idam, varai murai, varaivathu eppadi, sr chakara eppadi irukkum,sree chakra, manthireegam, manthirigam.

அமெரிக்கா நாட்டு பாலைவனத்தில் வரை படமாக காணப்படும் ஸ்ரீசக்கரம்

அமெரிக்காவின் மிக்கி பேசின் பாலைவனத்தில் காண்பப்டும் ஸ்ரீசக்கரம். ஸ்ரீசக்கர மந்திர பயன் மற்றும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசக்கரம் படங்கள், ஸ்ரீசக்கரம் பூஜை, ஒளசதம். mickey basin sri chakra, mickey basin sri yantra, mickey basin oregon sri yantra, america sri chakram, sri chakra puja, sri chakra oregon, sri chakram in usa, sri chakra yantra, how to draw a sri chakra, sri chakra buy online, sri chakra in usa, sri chakra in tamil, sri chakra inn chennai. 

மிக்கி பேசின்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில் உள்ள இடம்தான் மிக்கி பேசின். சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.

ஸ்ரீசக்கரம்

பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை தனது குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில், 21.400 கிலோ மீட்டர் சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார். ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதைப் பற்றி தனது ஆராய்ச்சியை தொடங்கிய வர்க்கு பயங்கர அதிர்ச்சி, காரணம் அது இந்தியர்களின் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஸ்ரீசக்கரம் என்பது கண்டறிந்தார்.

 அவர் பார்த்தது தொடர்ந்து அரைமணி நேரம் வட்டமிட்ட பின்னர் தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது. இதைப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை காரணம்.

நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஸ்ரீசக்கரம் என்றே தெரியும். UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன், ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை  ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகனம் வந்து சென்ற தடமோ இல்லை என்றும், மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்ரீசக்கரம் எப்படி வரைய பட்டது, எந்த விதமான கருவிகள் பயன்படுத்தி உள்ளார்கள், யாரால் எப்பொழுது வரையபட்டது, வரைந்தவர்கள் வேற்று கிரக வாசிகளாக, அல்லது கடவுளா என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

இந்தியவில் வழங்கப்பட்டு வரும் கூகுள் வரைபடத்தில் தெளிவாக ஸ்ரீசக்கரம் தெரியவில்லை அமெரிக்காவில் உள்ள நமது வாசகர்கள் தெளிவாக காண இயலும். கீழே கொடுக்க பட்ட இணைப்பில் சென்று பார்களாம்.

 Latitude - 42°44'17.18"N Longitude - 118°18'50.44"E

ஸ்ரீசக்கரத்தின் பயன் அறிவோம்

ஸ்ரீசக்கரத்தின் மகிமை

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

மூன்றின் பலம்

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

முதல் ஆவரணம்

இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

இரண்டாவது ஆவரணம்

பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

மூன்றாவது ஆவரணம்

பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.

நான்காவது ஆவரணம்

இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது ஆவரணம்

பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.

ஆறாவது ஆவரணம்

அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

ஏழாவது ஆவரணம்

புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.

எட்டாவது ஆவரணம்

மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

ஒன்பதாவது ஆவரணம்

பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.

இந்துக்கள் ஒவ்வொருவரும் படித்து பகிரவேண்டிய செய்தி இது.

Owshadham America Mickey basin sri chakra ஒளசதம் அமெரிக்க மிக்கி பேசின் ஸ்ரீசக்கரம்


Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.