மூட்டு வலி நீங்க மருத்துவம் - mootu vali neenga maruthuvam

Owshadham - ஒளசதம்

 மூட்டு வலி நீங்க மருத்துவம்

Mootu vali neenga maruthuvam

மூட்டு வலி நீங்க மருத்துவம் - mootu vali neenga maruthuvam

மூட்டு வலி ஏன் வருகிறது

மூட்டு பகுதியில் நரம்பு, ஜவ்வு மற்றும் எலும்பு பகுதியில் ஏற்படும் பாதிப்பு அல்லது முழங்கால் முட்டி பகுதியில் எற்படும் அதிக உராய்வின் காரணமக்கவும் வலி உண்டாகின்றது. தற்காலத்தில் இளமை காலத்தில் எதிற்காலத்திற்க்கு உடலுக்கு தேவைப்படும் சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலில் சத்துக்களை நாம் சேமித்து வைத்து கொள்வதில்லை. உடல் எடை அதிகரிக்கும் போது உடலின் மொத்த எடை முழங்காளின் மூட்டு பகுதி தாங்கிகொள்வதால் எலும் மற்றும் ஜவ்வு பகுதி அதிக படியான பாதிப்புக்கு உள்ளாகி தேய்மானங்கள் ஏற்படுகின்றன. உடலில் வாயுக்கள் தங்குவதலும், ராஜ உறுப்புக்கள் பதிப்படைவதாலும் மூட்டு வலி உண்டாகிறது.

செய்வினையால் மூட்டு வலி

இன்றைய காலகட்டத்தில் செய்வினையால் மூட்டு வலி உண்டாக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படும் ஆனால் இது இன்றளவும் உண்மை என்று மாந்திரீகர்கள் கூறுகின்றனர். எவ்வித காரணமும் இன்றி முழங்காளின் மூட்டு பகுதியில் தாங்க முடியாத வலி உண்டாகும். இவ்வாறு உண்டாகும் வலி உரிய மருத்துவ பரிசோதனையில் எந்த வித குறைபடும் கண்டுபிடிக்கவும் இயலாது. இதற்க்கு தீர்வு பைரவர் வழிபாடே சிறந்தது என்றும் அல்லது உரிய மாந்திரீக முறையால் அதற்க்கு தீர்வு காண்பதே சிற்ந்தது என்று சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மூட்டு வலி அறிகுறிகள்

சித்தமருத்துவர்கள் முழங்கால் மூட்டு வலியை மூட்டு வாதம் என்று குறிப்பிடுகின்றனர். இதன் முதல் கட்ட அறிகுறியாக உட்காந்து எழும் போது மூட்டு பகுதியில் ஒருவித சொடக்கு சப்தம் உண்டாகும். நடக்கும் போது மூட்டில் உராய்வு உண்டாவதை உணர முடியும். இரவு தூங்கும் போது லேசான வலி உண்டாகும். முழங்கால் தோல் பகுதி சிவந்து காணப்படும் சிலருக்கு எரிச்சல் உண்டாகும். மூட்டு தேய்மானம் அதிக அளவு இருக்கும் பட்சத்தில் வீக்கம் உண்டாகும் நீர் கட்டி போல் வீங்கி காணப்படும். 

மூட்டு வலி நீங்க உணவுகள்

குழந்தை பருவம் முதல் சரிவிகித உணவுகளை எடுத்து கொண்டால் முதுமை காலத்தில் மூட்டு வலி வாரமல் தடுக்க முடியும் அப்படியும் தவரியவர்கள் 30 வயதில் இருந்தாவது மூட்டு, ஜவ்வு தேய்மனம் ஏற்படாமல் தடுக்க உரிய வீரிய உணவுவகைகளை பின்பற்று வது இன்றைய நவீன காலத்தில் அவசியமாகிறது. சுண்ணாம்பு சத்து நிறைந்த காய்கறிகள், முட்டை, பால், நாட்டு கோழி, ஆட்டு இறைச்சிகள், ஆட்டு கால் எலும்பு, மீன்களிம் வளர்ப்பு மீன்கள் தவிர்த்து மற்றவைகள் சாப்பிடலாம். முருங்கை கீரை, பூ, எலும்பு ஒட்டி, பாசி பயறு, கருப்பு சுண்டல், நண்டு, முட்டை கோஸ், பிரண்டை, அமுக்கார, நட்ஸ் வகைகள், எல், தேங்காய் போன்ற அதிகம் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை வாரத்தில் குறைந்த பட்சம் 15 வேளைகள் எடுத்து கொண்டு வந்தால் மூட்டு வலி ஏற்படாமல் தடுக்க முடியும்.

மூட்டு வலி உடற்பயிற்சி

படுக்கையிலோ அல்லது தரையிலோ படுத்துக் கொண்டு முழங்கள் முழிகளை மோல் நோக்கி இழுப்பதனால் மூட்டு வலி கட்டுபடும், மூட்டு பகுதியின் பின் புறம் அதாவது மடிப்பு பகுதியில் உள்ள நாரம்புகளை அழுத்தி விடுவதாலும் கட்டுபடும். தோப்பு கரணம் போடுவதால் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும் இதை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யதுள்ளனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சைக்கில் ஓட்டுதல், சிறிய நடை பயணம் செய்து. உட்காந்த நிலையில் காலில் எடைகல் தூக்கி கீழ் கால்களை அவ்வப் போது விரைப்பாக்கி தளர்த்தி மீண்டும் விரைப்பாக்குதல் போன்று பல எளிய உடல் பயிற்ச்சிகளை மேற்க் கொண்டு மூட்டு வலி வராமல் பாதுகாத்து கொள்ளலாம்,

மூட்டு வலி நீங்க யோகா

அதோமுக சவாசன, கபோடாசன, சுசிராந்த்ராசன, விருக்ஷாசன, விபரீத கரண, சவாசன நிலை இவைகள் உடலில் உள்ள இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வலிகளை போக்க கூடிய யோக சனங்கள் ஆகும். மூட்டு வலி நீங்க இந்த யோக சனத்தை பயன்படுத்தும் போது அதற்குறிய கட்டுபாடுகள் மற்றும் விதிமுறைகளை பின் பற்றுவது அவசியமாகிறது.

மூட்டு வலிக்கு வீட்டு மருத்துவம்

மூட்டு வலி குணமாக பல வீட்டு கை  வைத்தியங்களும் பின்பற்ற படுகிறது வலி உள்ள இடத்தில் வெந்நீர், தவிடு, கல் உப்பு, மணல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தை சூடு செய்து மேற்படி பொருளை அதில் போட்டு இளவம் சூடாக வருத்து ஒத்தடம் கொடுக்க ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு  வலி குணமாகும், இதில் வெந்நீர் ஒத்தடம் சிறந்த பலனை கொடுக்கின்றது. 

மூட்டு வலி குணமாக எண்ணெய் பூச்சு

நல்லெண்ணெய் அல்லது ஆமணுக்கு எண்ணெய் எடுத்து மூட்டுகளின் மீது தடவி வர ஜ்வ்வுக்கு தேவைய எண்ணெய் தன்மை கிடைத்து உராய்வின் தன்மை குறைந்து வலி குணமாகிறது இரவு நேரத்தில் படுக்கைக்கு செலும் முன் செய்வது நலம். 

மூட்டு வலி குணமாக செம்மண் பூச்சு

தேவையான அளவு செம்மண் எடுத்து வந்து அதனை தேவையற்ற கற்கலை நீக்கி அம்மியில் போட்டு மை போல அரைத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல செய்து மூட்டின் முன் மற்றும் பின் புறம் பூசி விடவும் மண் பூசிய பகுதி நன்றாக வெய்யிலில் படும்படி சுமார் 1 முதல் 2 மணி நேரம் நன்றாக காயவிட்டு பின் வெந்நீரில் கழுவி விடவும் இவ்வாறு குறைந்தது மூன்று நாட்கள் செய்து வர முழங்கால் மூட்டில் தங்கி உள்ள தேவையற்ற நீர் வெளியேறி வலி குணமாகும்.

மூட்டு வலிக்கு என்ன மருந்து

மூட்டு வலி நீங்க சித்த மருத்துவத்தில் பலமுறைகள் பின் பற்றபடுகிறது இது மருத்துவர்களின் தனிபட்ட திறமையாகும். அதில் சிலவற்றை இங்கு காண்போம். பிரண்டை செடியில் இருந்து பிரித்து எடுத்து தினம காலை மாலை சாப்பிட்டு வர மூட்டு வலி நீங்கும். அஸ்வகந்தா லேகியம், சங்கு பஸ்பம், அண்ட பஸ்பம், முடகற்றான் லேகியம்,  நத்தை ஓட்டு சுண்ணம் இவைகள் மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடிய மருந்துகள் ஆகும் இவைகள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. சாப்பிடும் அளவுகள் லேகியம் தவிர மற்றவைகள் அரிசி எடை பாலில் உட்கொள்ள வேண்டும். லேகியம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலுடன் சாப்பிட்டு வரலாம். தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வர நல்ல பலனை எதிர் பார்க்கலாம். மேற்ச்சொன்ன அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. 

மூட்டு வலி நீங்க சித்த மருத்துவம்

மூட்டு  வலி நீங்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் மூட்டு வலி தைலம் செய்முறை. இது மிகச்சிறந்த பலனை கொடுக்க கூடிய ஓர் அரு மருந்து என்றே குறிப்பிடலாம். இது சித்த மருத்துவ முறை என்றாலும் அனைவராலும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் ஓர் எளிய மருந்து ஆகும்.

மூட்டு வலி நீங்க தைலம் தயாரிப்பு

தலைம் செய்ய தேவையான மூலிகைகள்

  1. முடக்கத்தான் இலைச் சார்
  2. வாதநாராயணன் இவைச் சார்
  3. தமு தாழை இலைச் சார்
  4. விராளி இலைச் சார்
  5. எலுமிச்சம்பழச் சார்
  6. எருக்கன் இலைச் சார்
  7. ஊமத் தன் இலைச் சார்
  8. நல்ல வேளை இலைச் சார்
  9. நொச்சி இலைச் சார்
  10. துளசி சார்
  11. குப்பை மேனி சார்
  12. சிறு தும்பை சார்

தலைம் செய்ய முறை

பிரன்டைச் சார் இவற்றின் சார் வகைகளை வகைக்கு 50 மில்லி எடுத்து ஓன்று கலந்து எடுக்கவும் தேன் மெழுகு 2 கிலோ அளவில்  எடுத்து சிறு துண்டுகளாக்கி ஓர் இரும்பு க டாயில் போட்டு உருக்கவும் என்னை போல் ஆனதும் சார் வகைகளை ஊற்றி கொதிக்க வைக்கவும் நீர் சடசடப்பு அடங்கியதும் அதில் மென் தால் தை மால் பச்சை கற்பூரம் நீலகிரி தயிலம் வகைக்கு 50 கிராம் கலந்து தட்டு போட்டு ழூடி இறக்கி ஆற விடவும் பின் பாட்டலில் அடைத்து பயன் படுத்த முழங்காள் மூட்டு வலி, தலை வலி, ஜாய்ண்ட் வலி அனைத்திற்க்கும் மேலுக்கு பூசி வர நல்ல உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒளசதம்
Owshadham

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.